Thursday 12 May 2011

தகிக்கும் காமம்



சோவென்று பெய்யும் மழை பிடிக்கும் உனக்கு உனக்குள் பெய்யும் மழையாகப்பிடிக்கும் எனக்கு#தகிக்கும் காமம்.

நம் தழுவலில் சிறைப்பட்ட காற்று அழுதது வியர்வையாக#தகிக்கும் காமம்

வெட்கம் வெட்கிக்கொண்டு ஓடியது நம் நிர்வாணம் கண்டு#தகிக்கும் காமம்

வாசலில் அள்ளித்தெளித்த ரங்கோலியாய் கிடந்தாய் நீ எனக்குள் வர்ணங்கள் நிரப்பிவிட்டு#தகிக்கும் காமம்

கை பிடித்த வண்ணத்துப்பூச்சியின் நிறம் போல உன் முத்தம் பிடித்து உதடுகளில் நிறமேற்றிக்கொண்டேன்#தகிக்கும் காமம்

தகனம் செய்யா காதல் இது எரியூட்டப்பட்ட காமம் இது#தகிக்கும் காமம்

காமம் இல்லாமல் காதல் வற்றிவிடும்;காதலே காமமாய் முற்றிவிடும்#தகிக்கும் காமம்

மழை பெய்த பின்னிரவின் குளுமை போல உடலெங்கும் நடுக்கம் பரவ என் மேல் பரவுகிறாய்#தகிக்கும் காமம்

உன் ஆடைகள் முகர்ந்து வீரியம் பெறுகின்றேன்;ஆடைகள் களைந்தே களைத்துப்போகின்றேன்#தகிக்கும் காமம்

மூங்கில்துளைகளில் பிறந்தது இசை;உன் காதுமடல்களில் சிந்தியது தேன்துளிகள்#தகிக்கும் காமம்

மகரந்தங்கள் சேர்ப்பித்த வண்டு நான்;நானே தேனுண்டு கிறங்கினேன்#தகிக்கும் காமம்

பனிசொரியும் புலர்பொழுதில் கத்தும் பறவையைப்போல ஆயிரம் முனகல் வெளியிட்டாய் நானோ வெறிகொண்டு கத்தலானேன்#தகிக்கும் காமம்

கிணற்றில் துள்ளிக்குதித்த மீனைப்போல கொடியுடலை வருத்தி எடுத்தாய்;என்னை மூழ்கடித்தாய்#தகிக்கும் காமம்

எல்லாம் முடிந்து அம்மா என்று நான் அரற்றுவது உனக்குப்பிடிக்கும்;தலைவருடி நெற்றியில் நீ முத்தமிடுவது எனக்குப்பிடிக்கும்#தகிக்கும் காமம்


..

..

2 comments:

  1. அட - இவ்வளவு கற்ப்னையா - இயல்பான் நிகழ்வுகளாய் - தகிக்கும் காமத்தினை - எளிய சொற்களில் - கவிதையாக வடித்தமை நன்று. மழை - காற்றின் வியர்வை - வெட்கப்பட்ட வெட்கம் - ரங்கோலி - வண்ணத்துப்பூச்சியினைப் போன்ற உதட்டின் நிற பரிமாற்றம் - எரியூட்டப்பட்ட காமம் தகனம் செய்யாக் காதல் - வற்றிய காதல் முற்றிய காமம் - பரவும் நடுங்கும் உடல் - வீரியம் பெறுவதும், களைப்பதும் - இசையாய் இனிக்கும் சொற்கள் - மகரந்தம் பரப்பி தேணுண்னுதல் - முனகலும் கத்தலும் - மூழ்கடிக்கும் கொடியுடல் - பிடித்த அரற்றல் தருவதோ இன்ப முத்தம் - அததனையும் அருமை - மிக மிக இரசித்தேன் - நிஜமாகவே நடப்பது போல உணர்ந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. எளிய சொற்களால் தகிக்கும் காமம் சூப்பர்... வாழ்த்துக்கள்

    ReplyDelete